கண்டி மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக ஆடு, மாடு முதலான மிருகங்களை அறுக்கக்கூடாது அவ்வாறு அறுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரும் பிரேரணை ஒன்று கண்டி மாநகர சபை மாதாந்தக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியது. எனினும் இரு அங்கத்தவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வெட்டுவது கண்டி நிலையத்தை உடனடியாக மூடி அங்கு ஒரு மிருக வைத்திய நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாநாகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமேயுமான ?????? விஜேரத்னவினால் முன் வைக்கப்பட்ட இப்பிரேரணை மீது அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, 145 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த கேந்திரமான இக் கண்டி மாநகரில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஆடு, மாடுகள் வெட்டும் பேராதனை வீதியில் அமைந்துள்ள சுதும் பொல நிலையத்தை உடனடியாக மூடி பௌத்த மதத்தின் சர்வதேச கேந்திரமாக விளங்கும் ஸ்ரீ தலதா மாளிகாவையை கொண்ட கண்டி மாநகரை புனிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். இப்பிரேரணை மீது உரையாற்றிய மாநகர சபை அங்கத்தவர் இலாஹி ஆப்தீன் (ஐ.தே.க) மற்றும் அஸ்மின் மரைக்கார் (ஸ்ரீ.ல.மு.கா) ஆகியோர் தமது எதிர்ப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
Home »
» ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
Written By STR Rahasiyam on Sunday, September 30, 2012 | 10:15 AM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment