JM
ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.
கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின் மொழிப்பெயர்ப்புகள், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
Home »
» துபாயில் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
துபாயில் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
Written By STR Rahasiyam on Saturday, September 1, 2012 | 4:25 PM
Subscribe to:
Post Comments (Atom)

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
சகோதரர் பீஜே அவர்கள் முற்றுகையின் போது பேசிய கண்டன உரையில் , நபிகளாரை இழிவுபடுத்தி ஒழுக்கங்கெட்டவர்களாக அவர்களை சித்தரித்த அமெரிக்க பாதிர...
0 comments:
Post a Comment